ராணிப்பேட்டையை அடுத்த அம்மூரில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் உள்ளது. இங்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலை வேண்டும், என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று ராணிப்பேட்டை- சோளிங்கர் சாலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.