குறள் : 314
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
மு.வ உரை :
இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.
கலைஞர் உரை :
நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.
சாலமன் பாப்பையா உரை :
நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.
Kural 314
Innaasey Thaarai Oruththal Avarnaana
Nannayanj Cheydhu Vital
Explanation :
The (proper) punishment to those who have done evil (to you) is to put them to shame by showing them kindness in return and to forget both the evil and the good done on both sides
இன்றைய பஞ்சாங்கம்
16-03-2021, பங்குனி 03, செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி இரவு 08.59 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. நாள் முழுவதும் அஸ்வினி நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிப்பலன் - 16.03.2021
மேஷம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். தொழில் வளர்ச்சிக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் உறவினர் வருகையால் வீண் பிரச்சினைகள் உண்டாகலாம். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். உற்றார் உறவினர்களுடன் பகை விலகி நட்பு ஏற்படும்.
கடகம்
இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சேமிப்பு உயரும்.
சிம்மம்
இன்று உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். தேவையற்ற அலைச்சல் விரயங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் உதவியால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும்.
கன்னி
இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் கால தாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். பேச்சில் நிதானம் தேவை.
துலாம்
இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலப்பலன் கிட்டும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையில் உங்கள் திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும்.
தனுசு
இன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகமாகலாம். தொழிலில் மந்த நிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். கடன்கள் சற்று குறையும். தெய்வ வழிபாடு நல்லது.
மகரம்
இன்று உங்களுக்கு திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் மனநிம்மதி குறையும். எந்த விஷயத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் பணி சுமை குறையும்.
கும்பம்
இன்று உங்களது பலமும் வலிமையும் கூடும். கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். வேலையில் உங்கள் திறமைக்கேற்ற பலன் கிட்டும். வருமானம் பெருகும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
மீனம்
இன்று உங்களுக்கு அக்கம் பக்கத்தினரால் பிரச்சினைகள் வரலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை தோன்றும். விட்டு கொடுத்து நடந்து கொண்டால் மன அமைதி உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,