குறள் : 308
இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.

மு.வ உரை :
பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.

கலைஞர் உரை :
தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது.

சாலமன் பாப்பையா உரை :
பல சுடரை உடைய பெருநெருப்பு நம் மீது பட்டது போன்ற தீமையை ஒருவன் நமக்குச் செய்தாலும், நம்மால் கோபம் கொள்ளாதிருக்க முடியுமானால் அது நம் உடலுக்கும் நல்லது.

Kural 308
Inareri Thoivanna Innaa Seyinum
Punarin Vekulaamai Nandru

Explanation :
Though one commit things against you as painful (to bear) as if a bundle of fire had been thrust upon you it will be well to refrain if possible from anger

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்
10-03-2021, மாசி 26 , புதன்கிழமை, துவாதசி திதி பகல் 02.40 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. திருவோணம் நட்சத்திரம் இரவு 09.02 வரை பின்பு அவிட்டம். சித்தயோகம் இரவு 09.02 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 

இன்றைய ராசிப்பலன் - 10.03.2021

மேஷம்
இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை சேரும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் சம்பந்தபட்ட நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். 

ரிஷபம்
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை உண்டாகலாம். பணவரவு சுமாராக இருந்தாலும் அனைத்து தேவைகளும் நிறைவேறும். சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

மிதுனம்
இன்று தொழில் வியாபாரத்தில் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

கடகம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை கூடும். தொழில் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.

சிம்மம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவார்கள். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியாக லாபம் கிட்டும்.

கன்னி
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். வேலையில் தேவையில்லாத அலைச்சலால் மன உளைச்சல் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள். 

துலாம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எந்த விஷயத்திலும் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

விருச்சிகம்
இன்று நீங்கள் மன உறுதியுடன் எந்த செயலையும் செய்து முடிப்பீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களில் புதிய நட்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். சேமிப்பு உயரும்.

தனுசு
இன்று குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வீண் செலவுகள் குறையும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். 

மகரம்
இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு சற்று குறையும்.

கும்பம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் எதிர்பாராத இழப்புகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். இது வரை இருந்த கடன் பிரச்சினைகள் குறையும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். 

மீனம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் மூலம் அனுகூலம் கிட்டும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி லாபம் அடைவீர்கள்.