குறள் : 303
மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்தல் அதனான் வரும்.
மு.வ உரை :
யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும் தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.
கலைஞர் உரை :
யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.
சாலமன் பாப்பையா உரை :
தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.
Kural 303
Maraththal Vekuliyai Yaarmaattum Theeya
Piraththal Adhanaan Varum
Explanation :
Forget anger towards every one as fountains of evil spring from it
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
06-03-2021, மாசி 22, சனிக்கிழமை, அஷ்டமி திதி மாலை 06.10 வரை பின்பு தேய்பிறை நவமி. கேட்டை நட்சத்திரம் இரவு 09.38 வரை பின்பு மூலம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. வாஸ்து நாள் பகல் 10.30 மணி முதல் 11.06 மணி வரை. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் - 06.03.2021
மேஷம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது உத்தமம்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். வருமானம் பெருகும்.
மிதுனம்
இன்று எந்த ஒரு செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும். உடன்பிறப்பிடம் ஒற்றுமை பலப்படும். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் பெரிய மனிதர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். உறவினர் வழியில் அனுகூலம் கிட்டும். கடன்கள் ஓரளவு குறையும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பணவரவு சற்று மந்தமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப்பலன் கிடைக்கும். புதிய நவீனகரமான கருவிகள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
கன்னி
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும்.
துலாம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையலாம். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
விருச்சிகம்
இன்று வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். நினைத்த காரியம் நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும்.
தனுசுு
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படலாம். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய மாற்றங்களால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்
இன்று குடும்பத்தில் உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.
கும்பம்
இன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு கிட்டும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.
மீனம்
இன்று உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.