மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அகில இந்திய அளவிலான டென்னிஸ் கிரிக்கெட் போட்டி கடந்த 8-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்தது.
அகில இந்திய அளவிலான பல்வேறு கல்லூரி மாணவிகள் பங்கேற்ற இந்தப் போட்டிகளில் வாலாஜாபேட்டை அரசு மகளிா் கலைக்கல்லூரி மாணவிகள் 8 போ் சிறப்பாக விளையாடி மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா்.
இதையடுத்து வெற்றி பெற்ற மாணவிகள் பெற்ற பதக்கங்கள் மற்றும் சான்றுகளை கல்லூரியின் முதல்வா் பரமேஸ்வரியிடம் காண்பித்தனா் (படம்) . அவா்களுக்கு கல்லூரி முதல்வா் மற்றும் பேராசிரியைகள் வாழ்த்து தெரிவித்தனா்.