ராணிப்பேட்டை மாவட்டத்தின் ஜப்பான் ஷுடோராய் கராத்தே பள்ளியின் 45வது முறை நடத்தும் கராத்தே பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவினை கியோஷி ரமேஷ் பாபு தலைமை வகித்தார். ஷிஹான் கிரிவாசன் முன்னிலை வகித்தார். ஷிஹான் தமிழரசு வரவேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் எஸ்.எம். சுகுமார் ராணிப்பேட்டை காவல்துறை உதவி ஆய்வாளர் தாசன் கங்காதர பள்ளி நிர்வாகி பாலாமணிபாபு, மக்கள் உரிமை கழகம் பாபு கலந்துகொண்டனர்.
மேலும் இவ்விழாவில் சிறப்பு கராத்தே பயிற்சியாளர்களுக்கு 39 ஆண்டுகளாக கராத்தே பயிற்சி பள்ளி நடத்திவரும் கிரிவாசன் 7வது, தமிழரசு 6வது, ராகேஷ் 5வது கருப்பு பட்டை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த கராத்தே தேர்வில் மொத்தம் 13 மாணவ மாணவிகள் கருப்பு பட்டை பெற்றார்கள். 47 மாணவ மாணவிகள் மஞ்சள் ஆரஞ்சு நீலம் பச்சை காவி ஆகிய 60 மாணவ மாணவிகள் பெல்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கு வந்தவர்களுக்கு தமிழரசு நன்றி கூறினார்.