அரக்கோணம் ஏரியில் மீன் வளர்ப்பு தனி நபருக்கு எதிராக போராட்டத்தில் குதித்த பொதுமக்கள் காவல் நிலையம் முற்றுகை இட்டதால் பரபரப்பு.
அரக்கோணம் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள ஏரி பகுதியில் சிலர் மீன் வளர்ப்பு செய்வதாக தொடர்ந்து காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில் புகாரை தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தற்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் குறிப்பாக அரக்கோணம் திருவள்ளூர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது, மேலும் இவர்களை சமரசம் செய்ய வந்த காவல்துறை சமரசம் செய்து மீண்டும் நகர காவல்நிலையத்திற்கு அழைத்து வரும்போது நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக மீன் வளர்க்கும் நபரை உடனடியாக அந்த மீன்களுடன் அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்